Chennai, 29, Oct

Super Character comedy artist Manorama admitted to Hospital to-day due to slippery in the Bathroom and got head injury. Due to this been admitted and severe treatment is going to the lady artist

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

சென்னை, அக்டோபர் 28: நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆச்சி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா முழங்கால் வலி காரணமாக முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்காமல், வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். அதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.