புல்லரிக்க வைக்கும் ‘மெலோடி’யின் புதிய வெளியீடு
வீரமணிதாசனின் தெய்வீக குரலில்
‘சந்தனம் மணக்குது’ ஐய்யப்ப பாடல்கள்
பரவசம் மிகுந்த பக்தி பாடல்களை தருவதில் முன்னணி நிறுவனமாக திகழும் மெலோடி, ஐய்யப்ப பக்தர்களுக்காக ’சந்தனம் மணக்குது’ என்ற பெயரில் புதிய பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
தெய்வீக குரலுக்கு சொந்தக்காரரான வீரமணிதாசன் இந்த வருடத்தில் பாடியுள்ள ஒரே இசை தொகுப்பு ‘சந்தனம் மணக்குது’ மட்டுமே. இந்த தொகுப்பில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அத்தனை பாடல்களுக்கும் வீரமணிதாசனே இசையமைத்து பாடியுள்ளார். நெய் அபிஷேகம், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. தவிரதொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒன்பது பாடல்களையும்கேட்கும்போது மெய் சிலிர்ப்பது நிச்சயம். அந்தஅளவிற்கு துள்ளல் இசை அமைந்துள்ளது.
ஆடியோ சிடி மட்டிமின்றி, வி.சி.டி, டி.வி.டி MP 3 என நான்கு வடிவமைப்புக்களில் ‘சந்தனம் மணக்குது’ விற்பனைக்கு வந்துள்ளது. வி.சி.டியில் வீரமணிதாசனே பாடி, நடித்துள்ளார். ஒவ்வொரு பாடலும் பல லட்சம் பொருட் செலவில் வெவ்வேறு விதமாக உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாக அமைந்துள்ளது.
பாடல் காட்சிகளில், புலி மீது ஏறி ஐய்யப்பன் வருவது, கன்னிசாமி இறங்கி வருவது உள்ளிட்ட காட்சிகள் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்டு பக்தர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அனைத்தையும் கவிஞர் முகிலன் எழுதியுள்ளார். பவர் சிவா நடனம் அமைத்துள்ளார். சுதிர், M.சுரேஷ் எடிட்டிங் செய்துள்ளனர். G.சுரேஷ்ராஜ் இயக்கியுள்ள ‘சந்தனம் மணக்குது’ ஆல்பத்திற்கு கிரியேட்டிவ் ஹெட்டாக ஜெக்தீப் குரோவர் செயலாற்றியுள்ளார்.
மக்கள் தொடர்பு:: செல்வரகு

குமார் ஸ்ரீநிவாஸ்

Advertisements