மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நாகேஸ்வரராவ் – பிரகாஷ் ராஜ்!

மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.

இவரைத் தவிர, முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

யுடிவி தயாரிப்பில், ஜீவா – பூஜா ஹெக்டே நடிக்கும் முகமூடி படத்தில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார் நரேன்.

இப்போது இந்தப் படத்தில் தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நாகேஸ்வரராவ் தவிர, முன்னணி கலைஞர் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய வேடத்தில் வருகிறார்.

கே இசையமைக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.