‘மகான் கணக்கு’ படத்தில்
நடிகரானார் எடிட்டர் சுரேஷ் அர்ஸ்
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’,’தளபதி’,’பம்பாய்’,’இருவர்’,இயக்குனர் பாலா இயக்கிய ‘சேது’,’பிதாமகன்’மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,’அமர்க்களம்’,’சந்திரமுகி’ என 500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் சுரேஷ் அர்ஸ்.இன்றும் பல படங்களுக்கு பணியாற்றி வருபவர்.இரண்டுமுறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.இவரை தற்போது நடிகராக ‘மகான் கணக்கு’ படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் டைரக்டர் சம்பத் ஆறுமுகம்.
இப்படத்தின் கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி செயலாக்க அதிகாரியாக நடித்துள்ளார்
முன்பு சில முன்னணி இயக்குனர்கள் நடிக்க வைக்க முயற்சித்தபோது கூட மறுத்து வந்த சுரேஷ் அர்சை புது இயக்குனரால் எப்படி நடிக்க வைக்க முடிந்தது? டைரக்டர் சம்பத் ஆறுமுகத்திடம் கேட்டோம்.
“மகான் கணக்கு’ படத்தின் காட்சிகளை ரசித்து அவர் எடிட் செய்யும் போதே நான் அவர் வேலை செய்யும் பாங்கை ரசிக்க தொடங்கிவிட்டேன்.கம்ப்யூட்டர் முன்பு அவர் அமர்ந்து எடிட் செய்வதை பார்த்தபோது அந்த கேரக்டரில் ஏன் இவரை நடிக்க வைக்க கூடாது என்று தோன்றியது.ஏன் எண்ணத்தை அவரிடம் சொன்னேன்.
‘எனக்கு நடிக்கிறத வெட்டத் தான் தெரியும்.நடிக்க தெரியாது’ என்றார்.இந்த கதாபாத்திரம் நடிக்கக் கூடாது.அதனால் நடிக்க வேண்டாம் .இயல்பா பண்ணினால் போதும்.நீங்க தான் பண்ணனும் என்று அவரை அன்பு தொல்லை செய்துசம்மதிக்க வைத்து விட்டேன்.அவர் இயல்பாக செய்ததை படமாக்கினேன்.காட்சியும்

நன்றாக வந்தது.இந்த படத்தில் அவர் நடிச்ச சீனை பார்த்துட்டு மலையாளப் படமொன்றிலும் அவரை நடிக்க வைத்துவிட்டனர்.
அவரைப் போலவே உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கார்த்திக் என்பவரையும் படத்தில் வழக்கறிஞராக நடிக்க வைத்திருக்கிறேன்.படத்தில் இடம் பெறும் கோர்ட் சீன ஒன்றிற்காக வசனம் எழுதும்போது காட்சி விவாதத்திற்காக அவரை ஆபிஸ்க்கு அழைத்திருந்தேன்.
ரமணா சார்பாக வாதிடும் வழக்கறிஞரின் வசனங்களை நான் பேசி நடிக்க பதிலுக்கு பேங்க் தரப்பில் நீங்கள் வாதாடினால் என்ன பேசுவீர்களோ அதை பேசுங்கள் என சொல்லி ரெகார்ட் பண்ணினேன். அவருடைய வாதத்திற்கேற்ப நானும் பேசி நடித்தேன்.அவர் கோர்ட்டில் வாதிடுவதை போல் இயல்பாக இருந்ததை பார்த்து அந்த கேரக்டரில் நீங்களே நடியுங்கள் என சொல்லி அவரை நடிக்க வைத்தேன்.
ரமணா தரப்பு வழக்கறிஞராக ‘நீதியின்குரல்’ புகழ் சி.ஆர்.பாஸ்கரனை நடிக்க வைத்துள்ளேன்.இந்த கிளைமாக்ஸ் கோர்ட் சீன் நிச்சயம் பரபரப்பாக பேசப்படும்” என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.
இந்த படத்தின் நாயகன் ரமணா எம்.பி.ஏ.ஸ்டூடண்டாக நடித்துள்ளார்.நாயகியாக மும்பை மாடல் ரீச்சா சின்ஹா அறிமுகமாகிறார்.ரமணாவின் அக்காவாக தேவதர்ஷினி நடித்துள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் டைரக்டர் சரவண சுப்பையா நடித்துள்ளார்.இவர்களுடன் ஸ்ரீநாத் ,மனோபாலா,லொள்ளு சபா ஜீவா முத்துக்காளை,சூர்யா.பி.சக்திவேல்,ஷர்மிளா,பேபி ரீத்திகா,ஐசக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.நா.முத்துக்குமார் ,சீர்காழி சிற்பி பாடல்களை எழுதுயுள்ளனர்.பூஜா பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் சம்பத் ஆறுமுகம்.’மகான் கணக்கு’ இம்மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
PRO: Nellai Ahagesh
Kumar srinivas/photo-video/journalist

Advertisements