ஆசிரியர் நேரடியாக இருந்து கற்றுத்தருவது போன்ற சிறப்பு

எளிய முறையில் தமிழ் கற்றுத்தரும்
‘ஆரம்பத்தமிழ்’ டி.வி.டி

பக்தி பாடல் சி.டி மற்றும் டி.வி.டிக்கள் தயாரிப்புகளில் தனக்கென்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள மெலடி நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பாக உருவாகி உள்ளது ‘ஆரம்பத் தமிழ்’. டி.வி.டி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இது இரண்டு பாகங்களுடன் தமிழை எழுத, படிக்க எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் நேரடியாக இருந்து கரும்பலகையில் எழுதி காண்பித்து கற்றுத்தருவது போலவும், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்தபடி கற்றுக்கொள்வதுபோலவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, ‘ஆரம்பத்தமிழ்’ டி.வி.டியின் சிறப்பு அம்சமாகும்.

இதனால் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே குழந்தைகள் எளிதாக தமிழ் எழுத. படிக்க கற்றுக்கொண்டு, பள்ளி சேர்க்கையின் நேர்முகத்தேர்வின்போது ஆசிரியர்களை கவரும் வாய்ப்புகள் இருக்கிறது. தவிர, முறைப்படி தமிழ் கற்றுக்கொள்ள நினைக்கும் எந்த தரப்பினருக்கும் பிரத்யேகமாக ஆசிரியர் ஒருவரை அமர்த்தி தமிழ் கற்றுக்கொள்வதுபோன்ற திருப்தியை ஆரம்பத்தமிழ் கொடுக்கிறது.

உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள், பழங்கள், வண்ணங்கள், வடிவங்கள், எண்கள், 216 உயிர்மெய் எழுத்துக்கள், தமிழ் மாதங்கள், தமிழ் நாட்கள், ஓர் எழுத்துச்சொற்கள், இரண்டு எழுத்து சொற்கள், மூன்று எழுத்து சொற்கள் என தனி தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு, தமிழ் ஞானத்தை தருகிறது மெலடியின் ‘ஆரம்பத்தமிழ்’

ரூ. 90 என்ற குறைந்த விலையில் இந்த டி.வி.டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆடியோ, வீடியோ கேசட் கடைகளில் கிடைக்கிறது.
தொலைபேசி தொடர்புகளுக்கு : 044-23751261, கைபேசி : 09790916206
மக்காள் தொடர்பு: செல்வரகு

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்

Advertisements