பிரபல நீச்சல் வீரர் நடிக்கும் ‘சேவற்கொடி’
‘பனேரிபிக்சர்ஸ் ‘எனும் பட நிறுவனம் சார்பில் மகரந்த்கமலாகர்,ஆனந்த் ரெட்டி இருவரும் இணைந்து மிகுந்தபொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சேவற்கொடி’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக அருண்பாலாஜிஅறிமுகமாகிறார்.இவர் பிரபல.நீச்சல் வீரர் ஆவார்.நீச்சலில் பலசாதனைகள் புரிந்த இவர் கடந்த 95 ஆம் ஆண்டு தனது 8 வயதில்தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடி வரை கடலில் 10 . 41 மணிநேரத்தில் 32 கி.மீ.நீச்சல் செய்து ‘உலக சாதனைசெய்திருக்கிறார்.ஏற்கனவே சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனின் நீச்சல்சாதனையை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கதாநாயகியாக பாமா நடிக்கிறார்.இயக்குனர் லோகிததாசின்அறிமுகமான இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர்.’மைனா’ கன்னட ரீமேக்கான ‘ஷைலு’படத்திலும்நடித்திருக்கிறார். வில்லனாக பவன் நடிக்கிறார்.இவர்களுடன் ‘எங்கேயும்எப்போதும்’புகழ் சி.சத்யா இசையமைக்கிறார்.அனைத்து பாடல்களையும்கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்இரா.சுப்பிரமணியன்.இவர் இயக்குனர்கள் சீமான்,ராதாமோகன்ஆகியோரிடம் இணை இயக்குனராக பனி புரிந்தவர்.
‘அபியும் நானும்’ படத்திற்கு வசனமும் எழுதியவர்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் ; “ஒவ்வொருமனிதனுக்குள்ளும் மற்றவர்களைப் பற்றிய ஒரு புரிதல்இருக்கும்.சிலரை ஒரு நிமிட சிரிப்பிலே பிடித்து விடும்.சிலரை இறுதிவரை பிடிக்காது.தனிப்பட்ட ஒருவரைப் பற்றி பலரும் ஒவ்வொருவிதமான புரிதலை வைத்திருப்பார்கள்.அப்படி தவறாக உணரப்படும் ஒருமனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயானமோதல் தான் இந்த கதை.வெவ்வேறு சூழலில் வாழக்கூடிய இருவர்யதார்த்தமாக சந்தித்துக் கொள்கிறார்கள்.பின் அவர்களுக்குள் மோதல்வருகிறது.அது ஏன் எப்படி ? என்பது தான் கிளைமாக்ஸ்.
திருசெந்தூர் கடற்கரையோரமுள்ள கிராமங்களின் பின்னணியில் கதைஉருவாகியுள்ளது.
ஒரு சூரசம்ஹாரத்தின்போது நாயகன், நாயகி, வில்லன் மூவரும் சந்திக்கநேர்கிறது.அடுத்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முடிகிறதுகதை.இடையில் என்ன நடக்கிறது? என்பதே பரபரப்பான திரைக்கதை.திருசெந்தூரில் நடைப் பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கதாநாயகன் கதாநாயகியை தேடும் காட்சியை மக்களோடு மக்களாக இருந்து படம்பிடித்தோம்.திருசெந்தூர், கன்னியாகுமரி சாலையில் நாயகன் அருண்பாலாஜியும் வில்லன் பவனும் மோதிக் கொள்ளும் சேசிங் காட்சிஒன்றையும் சிரமப் பட்டு படமாக்கி இருக்கிறோம். படத்தின் காட்சிகள்அனைத்தும் யதார்த்தமாக அதேவேளையில் ஜனரஞ்சமாகவும்இருக்கும்” என்றார்.

Thanks & Regards,
Nellai azhagesh,PRO

kumar srinivas
photo/video journalisty