ஆன்லைனில் கலக்கும் கர்மா

கிரியேடிவ் கிரிமினல் தயாரித்து அர்விந்த் ராமலிங்கம் இயக்கும் ‘கர்மா’ திரைப்படம் ஆன்லைனில் கலக்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கர்மா திரைப்பட குழுவினர் கர்மாவில் நடிப்பதற்காக முன்னணி நடிகர், நடிகைகளை facebook மூலமாக தேர்வு செய்வதாக அறிவித்து இருந்தனர். அறிவிப்பு வெளியான சில நாட்களிலயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். கிட்ட தட்ட 22000த்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர், அவற்றில் 200 பேர்களை shortlist செய்திருக்கின்றனர்.

கர்மா படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய மற்ற்றொரு விஷயம் என்னவென்றால் 15 நாட்களுக்குள் கர்மா திரைப்படத்தின் facebook பக்கத்திற்கு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். அவற்றில் 7500க்கும் அதிகமானோர் அப்பக்கத்தை தொடர்கிறார்கள். இப்படத்திற்கான audition வரும் 11 மற்றும் 12 தேதிகளில் சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் பற்றி இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், “இந்த தேடலுக்கான response மிகவும் அருமையாக இருந்தது. இவ்வளவு பேர் நடிக்க ஆர்வம் உள்ளவர்களா என்று என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பல பிரபலங்களின் திரை வாரிசுகள் கூட நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தது கண்டு வியப்படைந்தேன். அதே சமயம் இவற்றில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க முடியுமே என்று வருத்தமும் அடைந்தேன். அதனால் shortlistஆன 200 நபர்களை கொண்டு புதிதாக படத்தில் ஒரு ஆல்பம் சாங் சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் திரைப்படத்தில் ஸ்டைல் partnerஆக அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம், 10 நபர்களுக்கு modelling வாய்ப்பும் அளிக்க இருக்கிறது. வின்னப்பிதிருந்தவர்களுக்கு எங்களால் ஆன சிறு உதவி இது.” என தெரிவித்தார்.

இது பற்றி மேலும் விவரிக்கையில் ” இந்த facebook மூலமாக நாங்கள் நடிகர்/நடிகைகளை மட்டும் தான் விண்ணபிக்க அழைத்து இருந்தோம் அனால், எங்கள் படத்தின் தொழில்நுட்ப பிரிவில் பனி புரிய வாய்ப்பு வழங்குமாறு பல பேர் விண்ணப்பித்திருந்தனர். துணை இயக்குனராக, பாடல் ஆசிரியாராக வேண்டி விரும்பி பல பேர் விண்ணப்பிதிருன்தினர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.”
கர்மா திரைப்படத்தின் போஸ்டர் design பெரும் வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கிறது. இப்படம் மார்ச் மாதம் துவங்கும் என அறிவிக்கபட்டிருகிறது.

மக்கள் தொடர்பு : மௌனம் ரவி

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைப்பட சுருள் நிருபர்

Advertisements