கந்தா

வி.பி.பிலிம்ஸ், வி. பழனிவேல் வழங்கும்
கந்தா

நில அபகரிப்பை அடிப்படையாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. வில்லன் போஸ், தஞ்சாவூரில் பாதுகாப்பில்லாமல் கிடக்கும் நிலங்களை உரியவர்களிடமிருந்து மிரட்டி உருட்டி அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார். இதற்கு போஸின் அரசியல்வாதி மாமா துணை நிற்கிறார். இடம் வாங்கும் பிரச்சினைத் தொடர்பாக ஏகப்பட்ட பேரை வெட்டிச்சாய்க்கிறார் வில்லன் போஸ். மலேசியாவில் இருந்து தஞ்சாவூருக்கு வரும் இளைஞனான கரண் – கந்தா தனது சொந்த மண்ணில் நடக்கும் அராஜகத்தை தட்டிக் கேட்கிறார் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. கரணின் நண்பர்களை போஸ் கும்பல் வெட்டிச் சாய்க்கிறது. ஆவேசமுற்ற கரண் வில்லனைத் தேடிப்போகும் பெரிய ஷாக் ஒன்றை சந்திக்கிறார். அந்த அதிர்ச்சி என்ன அதை கரண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை என்கிறார் படத்தின் இயக்குநரான திருவாரூர் பாபு என்கிற பாபு K விசுவநாத்.

வில்லன் போஸை சந்திப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுப் பாலத்திற்குச் செல்கிறார் கரண். தனியாக வருவதாகச் சொன்ன வில்லன் ஏராளமான ஆட்களுடன் வருகிறான். இருவருக்குமான பேச்சுவார்த்தை முற்றுகிறது. வில்லன் தனது அடியாட்களை ஏவிவிட கரணுக்கும் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இப்படி ஒரு சண்டைக் காட்சியை தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் நாற்பது ஸ்டண்ட் வீரர்களுடன் படமாக்கினார். படத்தின் பிரம்மாண்டங்களில் இதுவும் ஒன்று.

இளம்பெண்ணை விரட்டிய கரண்
கந்தா திரைப்படத்தில் பரபரக்க வைக்கும் என்கவுண்டர் காட்சிகள் நான்கு இடம்பெற்றிருக்கின்றன. தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்கும் போலீஸ் எஸ்.பியான ஜாபர்சேட் ரவுடிகளின் அராஜகமும் ஆள்கடத்தலும் கட்டைப் பஞ்சாயத்தும் தஞ்சாவூரில் மலிந்து கிடப்பதை உளவுத்துறை மூலம் அறிகிறார். உடனே களத்தில் குதிக்கிறார். தனிப்படை அமைத்து ரவுடிகளை தேடுகிறார். போலீஸார் சுற்றி வளைத்தவுடன் ரவுடிகள் தாக்குதல் தொடர… பதிலுக்கு போலீஸாரின் துப்பாக்கிகள் சீறுகின்றன. ரவுடிகள் சுருள்கிறார்கள். இப்படி ஒரு பரபரப்பான காட்சி தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார்ரப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் இருந்து தஞ்சைக்கு வரும் கந்தா, நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார். ஒரு இளம்பெண்கள் இருவர் ஒரு குழந்தையை கடத்திச் செல்வதை பார்க்கிறார். உடனே ஆட்டோவில் நண்பர்களுடன் ஏறி அந்த இளம்பெண்ணை விரட்டிச் செல்கிறார். தங்களை ஹீரோவும் நண்பர்களும் விரட்டுவதை உணர்ந்த்தும் அந்த இளம் பெண்கள் தஞ்சாவூரை சுற்றத் தொடங்குகிறார்கள். முடிவில் அவர்கள் குழந்தையை கடத்தவில்லை என்பது புரிகிறது. இப்படி ஒரு சுவாரஸ்யமான காட்சி கரண், மித்ரா, ஆர்த்தி, சத்யன் நடிக்க பாபு K விசுவநாத் இயக்கத்தில் படமாக்கப்பட்டது.

நில மோசடியில் விவேக்

மலேசியாவில் இருந்து தஞ்சாவூருக்கு வரும் தங்கமகன் விவேக் ஊரில் சமூக சேவைகள் செய்வதற்காக ஏராளமான இடங்களை வாங்கிக் குவிக்கிறார். இடங்களை வாங்குவதற்கு அவருக்கு உதவுகிறார் அவரது நண்பர் செல்முருகன். விவேக் கோடிக்கணக்கில் வாங்கிக் குவித்த நிலங்கள் அத்தனையும் போலி பத்திரங்கள் மூலம் அவரது நண்பர் செல் முருகன் வாங்கிக் கொடுத்த இடங்கள் என்று தெரிய வருகிறது. ஏராளமான பணத்தை ஏமாந்த விவேக் கடைசியாக ஒரு திட்டம் போடுகிறார். அதன் மூலம் இழந்த பணம் அத்தனையையும் மீட்கிறார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான காட்சி கந்தா திரைப்படத்திற்காக படமாக்கப்பட்டது. நில அபகரிப்பு வழக்குகள் பலர் மீது பாயும் நிலையில் இந்த காமெடி டாப்பிக்கலாக படத்தில் அமைந்து விட்டது என்கிறார் இயக்குநர்.

இசை சக்தி ஆர் செல்வா

ஒளிப்பதிவு எம். சிவக்குமார்

ஸ்டண்ட் சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்

பாடல்கள் சிநேகன் பா. விஜய் யுகபாரதி ஏக்நாத்

நடனம் தினா மனோஜ்

ஊடகத் தொடர்பாளர் மௌனம் ரவி

கலை இயக்குநர் சங்கர்

தயாரிப்பு
கல்பனா பழனிவேல்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்
பாபு K விசுவநாத்

PRO: Mounam Ravi

kumar srinivas
photo/video journalist

Advertisements