பெண்களுக்கான விழிப்புணர்வு படம்
அசைவம்

மக்கள் தொடர்பு:
வெட்டுவானம் சிவக்குமார்
9383388856

பணத்திற்காகவும், சொகுசாக வாழவேண்டும் என்கிற பேராசையாலும் பெண்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது “அசைவம்”

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்களது எண்ணம் அறிந்த காமவெறியன் ஒருவன் அவர்களைத் தன் வசப்படுத்துகிறான். அவனிடம் சிக்கிய அந்த பெண்களின் கதி என்ன? என்பதை விறுவிறுப்பான பின்னணியில், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது “ அசைவம் “

அன்னை தெரசா இண்டெர் நேஷனல் சார்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கியும் இருக்கிறார் கின்னஸ் கிஷொர். நாயகன் சித்தார், நாயகிகள் ஜெனிபர்,ஸ்ரீஜா இவர்களுடன் வாசு விக்ரம், சிட்டி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

எடிட்டிங் –ஈஸ்வர், பாடல்கள்- பாலா, இசை – கிருஷ்ணா, ஒளிப்படிவு – வெங்கடேஷ், நடனம் – பவர் ஷிவா.

kumar srinivas
photo/video journalist

Advertisements