எஸ்.பி.பிலிம்ஸ்

வழங்கும்

“கண்டதும் காணாததும்”

எஸ்.பி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் “ கண்டதும் காணாததும்”.

இப்படத்தில் விகாஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வைகை, கோரிப்பாளையம் படங்களில் நடித்த சுவாஷிகா நடித்துள்ளார். இவர்களுடன் “பரோட்டா” சூரி, ஆர்.சுந்தர்ராஜன், “சூப்பர் குட்” லக்ஷ்மணன், ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அந்த இறுகிய நட்பில் திடீரென்று ஒருநாள் விரிசல் விழுவது போல ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் நாயகன் மீது கோபம் கொள்கிறார் நாயகி. அதன் விளைவு! இருவரும் பிரிய நேர்கிறது. அப்படி என்ன நடந்தது? மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா..?அவர்கள் நட்பு காதலாக மாறியதா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக புதுமையான திரைக்கதை அமைப்பில் யதார்த்தமான படமாக இயக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சீலன்.

படத்தைப் பற்றி இயக்குனர் சீலன் மேலும் கூறியதாவது… “இந்தப் படத்தின் திரைக்கதை வழக்கமான திரைக்கதை இல்லை, பிரம்மிப்பான விஷயங்களும் இல்லை. கதை சொல்லும் யுக்தியும் வழக்கமானது இல்லை. ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இதுவரை தமிழ்சினிமாவில் வந்த படங்களில் இல்லாத வகையில் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளது.

இந்தப்படத்தில் முதல் முறையாக பாடல்களிலும், காட்சிகளிலும் விதவிதமான ரெசுலுசன்கள் கொண்ட ஆறு வெவ்வேறு விதமான கேமராக்கள் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் பாடல்களிலும், காட்சிகளிலும் கேமராக்களின் வித்தியாசங்கள் தெரியாது.

இந்தப் படத்தில் வரும் ‘முர்ரா முர்ரா’ என்ற பாடலை நார்வேயில் உள்ள தமிழர் வசீகரன் எழுதியிருக்கிறார். ‘முர்ரா முர்ரா’ என்றால் தமிழில் ‘அழகிய காலைப் பொழுது’ என்று அர்த்தம். இந்தப் பாடலைப் பாடிய பின்னணிப் பாடகி சின்மயி பாடி முடித்தவுடன் பாடல் வரிகள் அருமையாக உள்ளது என்று வெகுவாகப் பாராட்டினார்.

அதேபோல இந்தப் படத்தில் நந்தலாலா எழுதிய ‘கண்ணே என் கண்ணே’ என்ற சோகப்பாடல் காதலர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை அழகிய கவிதையாக சொல்லும் பாடலாக இருக்கும். நந்தலாலா படத்தில் ஒரு காட்சியிலும் தோன்றி நடித்திருக்கிறார்.

நாயகி சுவாஷிகா மிகச்சிறந்த நடிகையாக வருவார். காரணம் படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எந்தவித இடையூறும் செய்யாமல் மிகச்சிறப்பாக நடித்து கொடுத்தார்.

பிரபல நடன இயக்குனர் ஜான்பாபுவின் மகன் தான் இப்படத்தின் நாயகன் விகாஷ். அவருடைய தந்தை சினிமாவில் பல வருடங்கள் இருப்பதாலேயோ என்னவோ விகாஷ் சினிமாவை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது தான்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே சாப்ட்வேர் துறையில் இருந்ததால் படத்தின் கிராபிக்ஸ்,அனிமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகளிலும் எனக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பும், உதவியும் செய்தார்.

படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் முழுவதுமாக முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் வெளியாகிறது” என்றார்.

படத்தின் பாடல்களை நந்தலாலா,தமிழமுதன்,வசீகரன் ஆகியோர் எழுத பிரபல பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் பாடகிகள் சின்மயி, அனிதா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். வி.ஏ.சார்லி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வின்ஷி பாஸ்கி ஒளிப்பதிவு செய்ய, பி.எஸ்.வாசு படத்தொகுப்பை மேற்கொள்ள நடனத்தை கோபால்ஜி மற்றும் ரோஹித் விஜயகுமார் இணைந்து அமைத்திருக் கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சீலன்

இணை தயாரிப்பு : “பெரியம்மாள் கலைக்கூடம்” சார்பில் எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.மணிமாறன்

தயாரிப்பு : “எஸ்.பி. பிலிம்ஸ்” சார்பில் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.இந்து

C.SAKTHIVEL P.R.O

kumar srinivas
photo/video journalist

Advertisements