சிறுவர்கள் குழந்தைகளின் உலகின் மாபெரும் வெற்றிப் படைப்பு ‘எம்.ஐ.பி’ .இதன் மூன்றாம் பாகம் எம்.ஐ.பி – 3 வெளிவர இருக்கிறது. அதுவும் 3 Dயில்.

குழந்தைகள் விரும்பும் படங்கள் இயக்குநர் பேரி சோனன் ஃபெல்டு ஒரு காலத்தில் ஒளிப்பதிவாளர்.
நம்பமுடியாத கதைகளையும் நம்பவைக்கும்படி படம் எடுக்கும் இவர். முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1, 1953 ஆண்டில் பிறந்தவர். நியூயார்க்கில் பிறந்த இவர், எப்போதும் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கவே விரும்பியவர். புத்திசாலி தனமாக இவர் படிப்படியாக வெவ்வேறு துறைகளில் தடம் பதித்து முன்னேறியவர்.

ஆர்வத்தில் ஆசைப்படாமல் விரும்பும் இடத்துக்குச் செல்ல தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள முயல்பவர்.
இயக்குநர்,ஒளிப்பதிவாளர்,இணை தயாரிப்பாளர்,நிர்வாகத் தயாரிப்பாளர்,நடிகர்,கதாசிரியர் என்று பல முகங்கள் இவருக்குண்டு. இவரது மனைவி சூசன் ரிங்கே ஒரு நடிகை மனைவியான பின் தயாரிப்பு பணியில் ஈடுபாடுகாட்டினார் ரிங்கே. அவ்வப்போது தமது தயாரிப்பு படங்களில் தலை காட்டுவது உண்டு.

பேரி முதலில் காயன் சகோதரர்களின் நிறுவத்தில் ஒளிப்பதிவு பணியேற்றார். நல்ல சம்பளம்.நிம்மதியான வேலை,மரியாதையான பெயர் எல்லாம் கிடைத்தது. பேரி இயக்கிய முதல் படம் “ஆடம் பேமிலி” நல்ல பெயர் பெற்றுத் தந்தாலும் “எம்.ஐ.பி.” இவரை இவரை உச்ச உயரத்தில் உட்கார வைத்தது.

பேரி சோனன் ஃபெல்டுவுக்கு எப்போதும் கற்பனை சக்தி அதிகம். இவரது தந்தை கெல்லி ஓர் ஓவிய ஆசிரியர். எனவே இது மரபு சார்ந்த திறமைதான்.

இளங்கலைப் பட்டத்துக்குப்பின் நியூயார்க் யுனிவர்சிட்டியின் ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்து பட்டம் பெற்றார். திரைப்படம் தொடர்பான அறிவைப் பெற்றார்.

இவர் முதலில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய படம் ‘இன் அவர் வாட்டர்’ 1982 ல் ஆஸ்கார் பரிசு பெற்றது. அதன்பின் காயல் பிரதர்ஸின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். அப்படி ‘ப்ளட் சிம்பிள்’ படத்தின் மூலம் இணைந்து தொடர்ந்து பணிபுரிந்தார். ‘ரைஸிங்க் அரிசோனா(1987) ‘மில்லர்ஸ் க்ராஸிங்’ (1990) போன்ற பல படங்கள் பிரபலமானவை.

இவர் முதலில் இயக்கியபடம் ஒரியன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கானது. அதுதான் ‘தி ஆடம்ஸ் ஃபேமிலி’ (1991) பெரிய வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியால் வெளியான ‘தி ஆடம்ஸ் ஃபேமிலி வேல்யூஸ் (1993) எதிர்பார்த்த அளவுக்கு ஒடவில்லை,. பிறகு உருவாக்கிய ‘கெட் ஷார்ட்டி’ (1995) நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சிறந்த காமெடி நடிகருக்கான கோல்டன் குளோப் விருதையும் பெர்லிக் சர்வதேச திரைபட விழாலில் பாரட்டும் பெற்றுத் தந்தது. ‘பாரஸ்ட் கம்ப்’ இயக்கும் வாய்ப்பு வந்தது. இவர் ஒப்புக் கொள்ளவில்லை. பேரி சோனன்… ஃபெல்டு வின் நோக்கமும் போக்கும் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குக்கு பிடித்து விடவே படம் இயக்கக் கேட்டார்.

அதுதான் ‘எம்.ஐ.பி’ 1997ல் வெளியாகி கொண்டாடக் கூடிய படமானது.பிறகு தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ் அழைத்து ‘ஓய்ல்டு வெஸ்ட்’ வாய்ப்பை 1999ல் வழங்கினார் இது தொலைக்காட்சி தொடரின் பின்னணியில் உருவான கதை.

அதன்பிறகு ஒரு காமெடிப்படம் தந்தார். பிக் ட்ரடிள்’ 2002ல் வந்த இது பெரிய பிரச்சனை தரவில்லை. பிறகு வந்த எம்.ஐ.பி.2 ஆம் பாகம் அசத்தலான் வெற்றி.
‘புஷ்ஷிங் டெஸ்லிஸ்’ மூலம் இயக்குநர் தளத்திலிருந்து தயாரிப்புத் துறையிலும் காலடி வைத்தார் நிர்வாகத் தயாரிப்பாளரானார். பேரி… ஜனரஞ்சக இயக்குநர் மட்டுமல்ல சிறந்த நகைச்சுவை உணர்வும் உள்ளவர். இவர் மிகச்சிறந்த காமெடி இயக்குநருக்கான எம்மி விருது கிடைத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 19 தலைப்புகளில் டிவி தொடர்கள், படங்கள் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவில் 15 தயாரிப்புகளுக்கு பணிபுரிந்துள்ளார் 9 படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் சில பாத்திரங்களுக்கு குரலும் கொடுத்துள்ளார். ஆடம்ஸ் பேமிலி வேல்யூஸ் படத்தில் ஒரு பாத்திரத்திற்கு வாந்தி எடுப்பது போல் குரல் கொடுத்துள்ளார்.

எத்தனை படங்களில் பணியாற்றினாலும் ‘எம்.ஐ.பி.’ வரிசைப் படங்களின் மூலம்தான் இவருக்கு உச்ச புகழ் கிடைத்துள்ளது.

‘எம்.ஐ.பி. முதலிரண்டைவிட மூன்றாவது பாகம்

PRO: Sivakumar

kumar srinivas
photo/video journalist

Advertisements