கதாநாயகன் அனுப்புடன் ஒரு சந்திப்பு

வட்டாரம், சிக்குபுக்கு, மறுமுகம் ஆகியபடங்களைத் தொடர்ந்து விமல் –சந்தானம் – நிஷா அகர்வால் நடிப்பில் வெளிவந்திருக்கும் இஷ்டம் படத்திலும் இரண்டு கதா நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார் அனுப்.

அனுப், இஷ்டம் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…

நிஷா அகர்வால் – காஜல் அகர்வாலின் தங்கை அவரை விமலுக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு நாயகன் வேடம்… நிஷாவும் மும்பையைச் சேர்ந்தவர்தான் என்றாலும் ஒரு தென்னிந்தியப் பெண்ணைப் போலவே மிகவும் பணிவுடன் நடந்து கொண்டார்… விமல் மிகவும் கலகலப்பான இயல்பான நடிகர்..மிகவும் நட்புடன் பழகினார்… இன்றைய தேதியில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் அவருடன் காம்பினேஷன் ஷாட்ஸ் இல்லாததில் வருத்தம் தான்… ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பையனாக நடித்திருக்கிறேன்… தொடர்ந்து 2வது கதா நாயகன் வேடம் என்றாலும், இஷ்டம் படத்தில் மிகவும் இஷ்டப்பட்டுத்தான் நடித்தேன்…. நிச்சயமாக எனக்கு ஒரு திருப்பு முனைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன்…

மறுமுகம் படம் எப்பொழுது வெளியாகிறது..?

விரைவில் மறுமுகம் வெளியாக உள்ளது… டேனியல் பாலாஜி ஒரு வில்லத்தனமாக நாயகனாகவும் நான் யதார்த்தமான நாயகனாகவும் நடித்திருக்கிறேன்… மறுமுகமும் எனது முகத்தைத் தமிழ் ரசிகர்களிடையே பதிக்கத் துணைபுரியும் என்று நம்புகிறேன்..

தங்களது குடும்பப்பின்னணி..? குடும்ப ஆதரவு பற்றி…

அப்பா பல தெலுங்குப் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்… எனக்கு முழு ஆலோசனைகளையும் அவர்தான் வழங்கினார்…

நடிப்பதற்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள்..?

ஸ்விங்கர்ஸ் நடனப்பள்ளியில் 8 ஆண்டுகள் நடனம் பயின்றதுடன் அங்கேயே நடன ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறேன்… தொடர்ந்து நடிகர் சங்கத்தில் ஜெயந்தி மாஸ்டரிடத்திலும் பயின்றேன்… ஆக்‌ஷன் பிரகாஷ் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சிகளும் கற்றுக் கொண்டிருக்கிறேன்… கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்த அனுபவமும் இருக்கிறது…

தமிழ் தவிர மற்ற மொழிகளில் நடிக்கிறீர்களா..?

ஆம் கேகா என்ற தெலுங்குப் படத்திலும் ரவிதேஜாவுடன் இரண்டு கதாநாயர்களில் ஒருவராக நடித்திருக்கிறேன்…

தொடர்ந்து இரண்டு கதா நாயகர்களில் ஒருவராகவே நடிக்கிறீர்களே..?

இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நான் திட்டமிடவில்லை… இன்னும் சொல்லப்போனால் இரண்டுக்கு மேற்பட்ட நாயகர்கள் என்கிற டிரெண்டு ஹிந்தி, தெலுங்கு படங்களில் இருப்பதைப் போல இப்பொழுது தமிழிலும் வந்து கொண்டுள்ளது…. அப்படி நடிப்பதில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது…
அதே நேரம் தனிக் கதா நாயகனாக நடிக்கும் வாய்ப்பினையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்… சில இயக்குனர்கள் அற்புதமான கதைகளுடன் என்னை அணுகியிருக்கிறார்கள்… விரைவில் அதற்கான முறையான அறிவிப்புகள் வரும்..

இஷ்டம் படத்தின் நாயகர்களின் ஒருவரான அனுப் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினார். தெலுங்குதான் இவரது தாய்மொழி என்றாலும் படித்தது வளர்ந்த்து எல்லாமே சென்னையில் தான் ஆகியால் நன்கு தமிழ் பேசுகிறார். சந்தேகமே இல்லாமல் தமிழ் சினிமா தான் இன்று இந்திய சினிமாவில் மிகவும் கோலோட்சிக் கொண்டிருக்கிறது எனக்கும் அதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று மிகவும் நம்புகிறார் அனுப்.

PRO: SELVARAGHU

Kumar srinivas
Photo/video journalist

Advertisements