‘திஅமேஸிங் ஸ்பைடர் மேன்’

குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர்மேன் சார்ந்த கற்பனையில் எத்தனை படங்கள் வந்தாலும் அசராமல்குழந்தைகள் ஆதரிக்கிறார்கள். அதே நேரம் அது அவர்களைக் கவரும்படிஇருக்க வேண்டும்.

‘ஸ்பைடர் மேன்’ வரிசையில் அடுத்து வர இருப்பது ‘ தி அமேஸிங்ஸ்பைடர் மேன்’ அமெரிக்காவில் சூப்பர் ஹீரோ படமாகஉருவாகியிருக்கிறது.கதை மூலம் இதே பெயருள்ள காமிக்ஸ் புத்தகம்தான்.

ஆண்ட்ரூ கார்பீல்டு (Andrew Garfeld) டைட்டில் பாத்திரம் ஏற்றுள்ளார்.அதாவது ஸ்பைடர் மேனாக வருகிறார். கதாநாயகன் அதாவது ஸ்பைடர்மேனின் பெயர் பீட்டர் பார்க்கர். எம்மா ஸ்டோன் (Emma Stone) முக்கியவேடமேற்றுள்ளார்.

ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோதான். அதில் நடிப்பவர்கள் கூட சூப்பர்கதாநாயகர்கள் ஆகிவிடுவார்கள். நடிகைகளும் அப்படிதான்.விரைவாக உயர்ந்து விடுவார்கள்.இந்த அமேஸிங் ஸ்பைடர்மேனில் நம் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளது சிறப்பு.ஹாலிவுட்காரர்கள் எங்கு திறமை இருந்தாலும் கொத்திக் கொண்டுபோய்விடுவார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. வித்தியாசமானபாத்திரங்கள் மூலம் இந்தித் திரையுலகில் பளிச்சிட்டு வருபவர்இர்ஃபான் கான். அவரை ஹாலிவுட் பயன்படுத்தியிருப்பதுபொருத்தம்தான்.

இப்படத்தின் இயக்குநர் மார்க் வெப் (Marc Webb) நம்ம ஊர்இர்ஃபான் இப்படத்தில் டாக்டர் ரத்தா என்கிற வலுவானகதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்படங்களில் அறிமுகமானவர்தான். அவருக்கு அங்கும் ஒருரசிகர் கூட்டம் உண்டு. இர்ஃபான்னுக்கு இதில் முக்கியமானவேடம். வில்லன் போல வருவார். ஆனால் இயக்குநரோ அதுவில்லன் வேடமல்ல அவர் நல்லவர்தான். அவர் எடுக்கும்முடிவுகள்தான் தவறானவை அதனால் அப்படி ஒரு பெயர்வந்திருக்கிறது’ என்கிறார்.

உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர்சக்திகள் வருவதும் வளர்ச்சி பெற்று விஸ்வரூபம்எடுப்பபதைப் பற்றிய கதைதான். அமேஸிங் ஸ்பைடர் மேன்.

உயர்நிலைப் பள்ளியொன்றிலிருந்து வெளியேற்றப்பட்டபதின்பருவ மாணவன் அதாவது டீன் ஏஜ் பையன்தான். பீட்டர்பார்க்கர் இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன்.அவன் தனது அங்கிள் பென் மற்றும் ஆண்டி மேயுடன் வளர்கிறான்.அவனது கடந்த கால வாழ்க்கை புதிராக இருக்கிறது. அவனுடையநேசத்துக்குரியவள் க்வன் ஸ்டேசி.இரண்டையுமே தேடி மீட்கஅவனுக்கு விருப்பம். இதற்காகவே நேரத்தைச் செலவிடுகிறான்.அவனுக்கு ஒரு ஃப்ரீப் கேஸ்’ அதாவது ஒரு சிறிய பெட்டிகிடைக்கிறது. அதை அவன் கண்டு பிடித்துதான் எடுக்கிறான். அதுஅவன் அப்பாவுடையது பல மர்மங்களையும் புதிர்களையும்உள்ளடக்கியது. அந்த பெட்டியின் மூலம் அப்பாவின் பழையகூட்டாளியை அடைகிறான்.அவன்தான் டாக்டர் கான்னரஸ்.அப்பாவின் ரகசியம் புரிபடுகிறது. ஆனாலும் என்ன. இவன் விதியேபிறகு மாறிவிடுகிறது. அவன் ஸ்பைடர் மேனாக மாறுவதுதலைவிதி என்று விதிக்கப்படுகிறது. அவன் ஸ்பைடர் மேன்ஆகிறான் அதற்குப் பிறகு அவன் எடுக்கும்அவதாரங்கள்,அட்டகாசங்கள்,சாகசங்கள்தான் ‘தி அமேஸிங்ஸ்பைடர் மேன்’ படம்.

இப்படத்தில் ஜேம்ஸ் வாண்டர் பில்ட் திரைக்கதை எழுத ஆல்வின்ஜேம்ஸ் மற்றும் ஸ்டீல் க்ளோக்ஸ் இருவரும் அதைசெலுமைப்படுத்தினர்.

இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் படப்பிடிப்புதொடங்கியது. அதுவும் ‘ரெட் எபிக்’ கேமராவுடன் இந்தக்கேமரா பல மாயாஜால தொழில்நுட்பங்ளின் சங்கமம். ஏப்ரல்2011ல் படப்பிடிப்பு முடித்து படப்பிடிப்புக்கு பிந்தையமெருகேற்றும் பணிகள் தொடங்கின.

சோனி நிறுவனம் இணையதளம், முன்னோட்டங்கள்.விடியோகேம் என்று இதற்கான வணிகப்படுத்தல் வேலைகளில் பரபரப்பாகஇருக்கிறது.

‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இந்தக் கோடைக்காலகொண்டாட்டமாக ஜூனில் வெளிவரவுள்ளது. இதுவும் 3டிபரிமாணத்தில் புதுவித அனுபவமாக இருக்க போகிறது.

கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம்தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில்வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமானதியேட்டர்களில் விரைவில் வெளிவரவுள்ளது. 100க்குமேற்ப்பட்ட நாடுகளில் வெளிவர உள்ளது. ‘தி அமேஸிங்ஸ்பைடர் மேன்’ இந்தியாவில் ஜூன் 29 இல் ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிறது .மற்ற நாடுகளில் ஜூலை 3 இல் ரிலீஸ் ஆகிறது

pro: SIVAKUMAR

kumar srinivas
photo/video journalist

Advertisements