சின்ன ஜெனிலியா…..

சாந்தினி

இயக்குநர் கே.பாக்யராஜின் அறிமுகங்கள் சோடை போகமாட்டார்கள். இதற்கு முந்தைய உதாரணங்கள் ஊர்வசி,சுலக்ஷனா, கல்பனா போன்று ஏராளம் பேர் உண்டு. அண்மை உதாரணம் சாந்தினி.

‘சித்து +2’ வில் அறிமுகமான சாந்தினி. சொல்லிக் கொள்கிற நடிப்பு வாய்ப்புள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து ஓசைப்படாமல் முன்னேறி வருகிறார். பாக்யராஜ் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். வெறுமனே மரத்தைச் சுற்றிவந்து டூயட் பாட கதாநாயகி நடிகைகளைப் பயன்படுத்தமாட்டார். அந்த பாரம்பரியத்தில் வந்ததாலோ என்னவோ சாந்தினியும் படத்தேர்வுக்கு முன் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

சர்ச் பார்க் கான்வென்டில் படித்த போதும். ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்த போதும் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் ஒரு பொறுப்புள்ள மாணவியாகவே அமைதியாக இருந்திருக்கிறார் சாந்தினி. மேடையேறி மைக் பிடித்து பேசியதில்லை. ஓரிரு முறை நடன நிகழ்ச்சியில் ஆடியதோடு சரி. மற்றபடி படிப்பு தவிர பிறவற்றில் ஆர்வம் காட்டபதவராகவே இருந்திருக்கிறார்.

ப்ளஸ்டூ முடித்தபின் ஒரு நண்பர் மூலம் சென்னை போட்டியில் கலந்து கொண்டார். அதற்கான முன் தயாரிப்பு பயிற்சிகளில் ஈடுபட்ட போது சாந்தினியின் மனப்பான்மையே மாறிப்போனது. மேடையேறப் பயந்த அவர். மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டது. கேட்வாக் போனது எல்லாம் நம்பமுடியாத அதிசயம்தான். போட்டியில் இரண்டாவதாக வந்தார். அதுமட்டுமல்ல ‘மிஸ் போட்டோஜெனிக்’ காகத் தேர்வானார். நல்ல முகவெட்டு கொண்டவர் என்ற அங்கிகாரம் கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சி. இந்த தகுதியில்தான் பாக்யராஜின் அறிமுக வாய்ப்பு வந்தது.

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டது விளம்பர வாய்ப்புகளை அள்ளித்தரும் என்றனர் சிலர். ஆனால் முதலில் வந்தது சினிமா வாய்ப்புதான். அதுதான் ‘சித்து +2’ ஒரு பிரபல இயக்குநர். திரைக்கதையில் பெயர் பெற்றவர் ஒருவரின் ப்டத்தில் நடிக்கிற பெருமையுடன், திருப்தியுடன் முதல் படத்தில் நடித்தார். படம் பார்த்து பலரும் பாராட்டினார்.

முதல் படத்திக்குப் பின் சாந்தினியை விளம்பர வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. இவர் நடித்த இரண்டாவது படம் ‘படித்துறை’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் படத்துக்கு மாறாக கிராமத்துப் பெண் வேடம் இதற்கிடையே ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்தன.

குறிப்பாக போத்தீஸ் விளம்பரங்களில் இவர் பிரபல முகமாகிவிட்டார். பீமா ஜுவல்லரி,அப்பல்லோ கம்ப்யூட்டர்ஸ் உள்பட ஏகப்பட்ட டெக்ஸ்டைல்.ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்தவர். இவர் சென்னை மட்டுமல்ல தமிழக பிற நகரங்கள் மட்டுமல்ல சிங்கப்பூர்,துபாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலிங் செய்துள்ளார். அண்மையில் துபாயிலுள்ள சென்னை ஜுவல்லரிக்காக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

போத்தீஸ் விளம்பரம் பார்த்து மூன்று படங்கள் வந்துள்ளன. தமிழில் நகுலுடன் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ இதை இயக்குபவர் ப்ருத்வி. இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர். இப்படத்துக்கு வெற்றி மாறன்தான் வசனம் எழுதுகிறார்.இதுதவிர இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகள்.

‘நான் ராஜாவாகப் போகிறேன்’ வித்தியாசமான ஆக்ஷன் படம். இதில் நான் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். திருநெல்வேலி ஸ்லாங் பேசும் என் கேரக்டர். ‘புதுசாக இருக்கும்’ என்கிறார் சாந்தினி.

எதாவது படிப்பதை விட படைப்புக்கு வழி செய்யும் படிப்பை தொடரவே சாந்தினிக்கு விருப்பம். அதனால் எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தார். படித்துவிட்டு ஏதாவது விளம்பரக் கம்பெனியில் கிரியேட்டிப் பகுதியில் வேலையில் சேரத் திட்டமிட்டிருந்தார்.அதற்குள் சினிமாவும், விளம்பரங்களும் இவரை முற்றுகையிட்டு விட்டன.

நடிகையான பின் ‘விஸ்காம்’ படிப்பு எந்த வகையிலாவது உதவியாக இருக்கிறதா?

‘சினிமாவில் பயன்படுத்தப்படும் டெக்னிக்கல் விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. இதற்கு விஸ்காமில் படித்த அடிப்படை விஷங்கள்தான் உதவி செய்தன. திரைக்கதை எது,நல்ல கதை எது என்று தேர்வு, செய்யும் திறமையும் விஸ்காமால் புரிந்து இருக்கிறது’ என்கிறார்.

சினிமாவுக்கு வரும்முன் இந்த துறை பற்றிய கருத்து, கண்ணோட்டம் எப்படி இருந்தது?

‘முன்பு படப்பிடிப்பு என்றால் சாதாரணமாக நினைத்து இருந்தேன். எல்லாவற்றையும் சுலபமாக எடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு பாடல் காட்சியை எடுக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள். ஒரு சில வினாடிகள் வந்து செல்லும் காட்சிக்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்று இங்கு வந்த பின்தான் தெரிகிறது’ என்கிறவர். இப்போது ஏராளமாக படங்கள் பார்த்து நடிப்பு, முகபாவனைகளை உற்று நோக்கி வருகிறாராம்.

சாந்தினியைப் பார்க்கும் பலரும் கேட்கும் கேள்வி… ‘நீங்கள் நடிகை ஜெனிலியா போலவே இருக்கிறீர்களே…? என்பது தானாம்.. அண்மைகால மகிழ்ச்சி இது.

படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல தரமான கதையும் பாத்திரமும் இருந்தால்தான் படங்களைத் தேர்வு செய்வதாகக் கூறும் சாந்தினிக்குப் பிடித்த நடிகைகள் ஸ்ரீதேவி,ஜோதிகா நடிகர் ரஜினிசார்தான் நடிப்புக்கு ஸ்ரீதேவி, ஜோதிகா என்றால் ஸ்டைலுக்கு ரஜினியாம்.

சாந்தினிக்கு பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமையுடன் சொந்தக்குரலில் பேசி நடிக்கும் நடிகை என்கிற தகுதியும் கூடுதல் பலமாக இருக்கிறது.

சினிமா விளம்பரம் எது எப்படி… ஒப்பிட முடியுமா?

‘நான் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்ட போது விளம்பரங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் முதலில் படவாய்ப்பு வந்தது. பிறகு விளம்பரங்கள் வந்தன. விளம்பர மாடலிங் என்பது ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும். வேலை சுலபம். நமக்கு நல்ல புகழும் கிடைக்கும். ஆனால் விளம்பரம் வரும்வரை நம்மை நினைவில் வைத்திருப்பார்கள். பிறகு மறந்து விடுவார்கள். சினிமாவில் அறிமுகமாகி நல்ல பாத்திரங்களில் நடித்து விட்டால் எந்தக் காலத்துக்கும் நம்மை மறக்க மாட்டார்கள். இரண்டும் இரண்டு வித அனுபவங்கள்’ என்றார் சாந்தினி.
PRO: SIVAKUMAR

Kumr srinivas
Photo/video journalist