விக்ர‌ம்,ஜீவா இணையும் ‘டேவிட்’;

இரண்டு கதைகள்,இரண்டு காலங்கள்,வாழ்க்கையை மாற்றும் இரண்டு முடிவுகள்!.

பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் டேவிட் திரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படம் இரண்டு தனி கதைகளை கொண்டதாக வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கிறது.இரண்டு கதைகளையும் இரண்டு கேமிரா மேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர்கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசை கலைஞராகவும் இருக்கிறார்.இருவரும் ஒரு சிக்கலை எதிர்கொள்ள அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பது தான் கதை.

விக்ரம்,ஜீவாவோடு,நாசர்,தபு,ரோகினி ஹட்டங்காடி,லாரா தத்தா,இஷா ஷெர்வானி,கே.பி.நிஷான்,ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை,நகைச்சுவை,ஆக்ஷன் கலந்து வித்தியாசமான முறையில் இந்த கதையை இயக்குனர் பிஜாய் நம்பியார் சொல்லியிருக்கிறார்.

மீனவர் கதையை எந்திரன் புகழ் கேமிராமேன் ரத்னவேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேட்வே பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து தயாரிக்கின்ற‌ன.

Thanks…

PRO: NIKIL

Kumar srinivas
Photo/video journalist

Advertisements