“தென்னிந்தியன் நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு” (SIDDA) தமிழக அரசால் தொழிற் சங்க சட்டவிதிகளின்படி பதிவு எண் 3457/CNI கடந்த 19/06/2012ம் தேதி முறைப்படி வழங்கப்பட்டது . அதன் பிறகு அந்த சங்கத்தின் (SIDDA) முதல் செயற்குழு கூட்டம் தலைவர் திரு. ரகுராம் அவர்கள் தலைமையில் கடந்த 24/06/2012 அன்று கூடி தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. அதில் முக்கியமான தீர்மானம் தென்னிந்தியன் நடன இயக்குனர்கள் சங்கத்தை தொழிற்சங்க சட்ட விதிகளின் படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (FEFSI) இணைப்பது என்று ஏகமனதாக முடிவுசெய்யபட்டது. அதன்படி நடன இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று, பெப்சியின் அழைப்பின் பேரில், 29/06/12 அன்று தென்னிந்தியன் நடன இயக்குனர்கள் சங்கத்தலைவர் திரு. ரகுராம் அவர்கள், பொருளாளர் திரு. D.K.S. பாபு அவர்கள் மற்றும் நடன இயக்குனர்கள், பெப்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் திரு. அமீர் அவர்களுக்கும், செயலாளர் திரு. சிவா அவர்களுக்கும், பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். அதன்பின் முறைப்படி சம்மேளனத்துடன் இணைப்புக்கான (AFFILIATION) விண்ணப்ப கடிதத்தை அவர்களிடம் சமர்ப்பித்து அங்கீகாரம் வழங்க கோரினார்கள். முதற்கட்ட பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாகவும் இடையுறுகள் இல்லாமலும் நடைபெற்றது. அதற்கு சம்மேளன தலைவரும், செயலாளரும் அவர்களது செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து வெகுவிரைவில் பதிலை அறிவிப்பதாக தெரிவித்தார்கள்.

PRO: KRIYAZ

kumar srinivas
photo/video journalist

Advertisements