பார்வதி கந்தசாமி
ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எம்.சி.கிருஷ்ணன் மிக பிரமாண்டமாக தயாரித்து வரும் புதிய படம் பார்வதி கந்தசாமி. இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் பாலா சுமார் 10 வருடங்களுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கிராமத்து சாயலில் நாயகன் தேடிய போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் வேலை எதுவும் செய்யாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சும்மா சுற்றி திரியும் விடலை பையனாக நடித்துள்ளார். உதவி இயக்குனர் என்பதால் நடிப்பில் வெளுத்துவாங்குகிறாராம்.கேரளாவை சேர்ந்த அபூர்வா ஹீரோயினாக அரிமுகமாகிறார். இவர் இப்படத்தில் கல்லூரி மாணவியாக வருகிறார். இவர்களுடன் பெஞ்சமின்,நாடோடிகள் ரிஷிவந்தி, பந்தா பசுபதி, சீனியம்மாள் மற்றும் சிவகாசி முருகேசன், பாலகிருஷ்ணன்,ராஜாராம் இணைந்துநடிக்கின்றனர். கிராமத்திற்கே உரித்தான அப்பா, அம்மா,அண்ணன்,அண்ணி, அக்கா,தாத்தா, பாட்டி. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த ஒரு ஒழுக்கமான பெண்ணுக்கு ஏற்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆக்சன்,காமெடி கலந்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் “பார்வதி கந்தசாமி”.
இப்படத்தின் படபிடிப்பு தஞ்சாவூர், ஒரத்ததநாடு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் காமெடியுடன் கூடிய கதாபாத்திரத்திற்கு நடிகர் தேடும் போது இயக்குனர், நடிகர் பெஞ்சமினிடம் கதை சொல்லியுள்ளார். கதையை கேட்டதும் தன்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியுள்ளது. சுமார் ¼ மணி நேரம் பேச வார்த்தை வராமல் தவித்துள்ளார். இந்த படத்தில் காமெடி எந்த அளவுக்கு பேசப்படுமோ அந்த அளவுக்கு பாடல்களும் பேசப்படும். குறிப்பாக காவேரியும் கொள்ளிடமும் என்ற பாடலும் ஒருமுறை ஒருமுறை பார்த்தேனே என்ற டூயட் பாடலும் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு – வெண்ணிலா சரவணன்,
படத்தொகுப்பு – வி.எம்.உதய சங்கர் D.F.T.,
:
தயாரிப்பு :எம்.சி.கிருஷ்ணன்
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்: பி.ஜெயகார்த்திக்

PRO: RAJKUMAR

kumar srinivas
photo/video journalist.

Advertisements