ஸ்ரீகிருஷ்ண கான சபா வழங்கும் பத்மஸ்ரீ ஷோபனாவின் ‘கிருஷ்ணா’


நவீன, நாட்டுப்புற, பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலையின் ஒரு அபூர்வ சங்கமம்.
சென்னை, ஜூலை 24, 2012: ‘கிருஷ்ணா’ என்ற தலைப்பில் நவீன, நாட்டுப்புற, பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலையின் அபூர்வ சங்கமமாக அமையும் இந்நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ண கான சபா ஆதரவில் நாரத கான சபா அரங்கில் ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 6.45 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. பத்மஸ்ரீ ஷோபனா மற்றும் ஸ்ரீகிருஷ்ண கான சபா செயலர் திரு. ஒய்.பிரபு இருவரும் நிகழ்ச்சியை இன்று முறைப்படி அறிமுகம் செய்தனர். இசை, நடனம் மற்றும் நாடகக் கலையை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ஸ்ரீகிருஷ்ண கான சபா இந்நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறது.
நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய திரு. பிரபு அவர்கள், ‘சமூகத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதை உறுதி செய்யவும் நமது கலாசாரத்தை ஒன்றிணைக்கவும் இசை, நடனம் மற்றும் நாடகக் கலையை போற்றிப் பாதுகாத்து ஊக்குவிப்பது மிகவும் அவசியமானதாகும். மகத்தான கலைஞர்களை கவுரவிப்பதுடன் இளம் கலைஞர்களை ஆதரிப்பதிலும், இசையின் மூலமாக ரசிகர்களுக்கு தெய்வீக அனுபவத்தை வழங்குவதிலும் ஸ்ரீகிருஷ்ண கான சபா முன்னுதாரணமாக விளங்கி வருகிறது’ என்றார்.

‘கிருஷ்ணா’ நிகழ்ச்சி பற்றி:
பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் ஷோபனா அவர்கள் வடிவமைத்து வழங்கும் இந்த நாட்டிய நாடகம், கிருஷ்ணனின் அவதார பெருமையையும் அவனது என்னற்ற லீலைகளையும் பிருந்தாவனம், துவாரகை, குருஷேத்திரம்… என அவனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தனை நிலைகளையும் ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணனின் குணாதிசயங்கள், அவனது தத்துவங்கள் ஏன் இன்னும் மனிதர்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளன என்பதை ஷோபனா மற்றும் அவரது குழுவினரின் தனித்துவமான இந்நிகழ்ச்சி கோடிட்டுக் காட்டும். இதுவரை வேறு எந்த நிகழ்ச்சியும் கிருஷ்ணண் பற்றி இத்தனை தெளிவான புரிதலைத் தந்திருக்க முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும்.

குறிப்பு: இந்த அற்புதமான நிகழ்ச்சியை கண்டு களிக்க விரும்பும் இசை மற்றும் நடன ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள் பின்வரும் இணையதளங்களில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து விவரங்கள் மற்றும் டிக்கெட்களைப் பெறலாம். http://www.msix.co.in ; http://www.lakshmansruthi.com ; http://www.ticketnew.com ; http://www.bookmyshow.com ; http://www.indianstage.in ; http://www.meraevents.com
கார்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய: 9841907744 ; 9941922322 எண்களை தொடர்பு கொள்ளவும் அல்லது info@msix.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பவும்.
அனைத்து லேண்ட்மார்க் கிளைகள், நாயுடு ஹால், லஷ்மண் ஸ்ருதி (வடபழனி), எம்6 ஈவண்ட்ஸ் & டூர்ஸ் (மேற்கு சிஐடி நகர், நந்தி சிலை அருகே) மற்றும் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் டிக்கெட்கள் கிடைக்கும்.

இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு இந்த அற்புதமான நிகழ்ச்சியை வழங்க எம்6 ஈவண்ட்ஸ் & டூர்ஸ் நிறுவனம் ஆர்வமுடன் தயாராக உள்ளது.

ஊடகம் தொடர்பான விவரங்களுக்கு:
திரு. நிகில் முருகன்
98400 77270 nikilnikil@gmail.com

kumar srinivas
photo/video journalist

Advertisements