“விஜய் அண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்” சார்பில்
பாத்திமா விஜய்அண்டனி தயாரிக்கும்
நான்
தவறு செய்வதற்கான, சந்தர்ப்பமும் , சூழ்நிலையும் ,அமையாத வரை அனைவரும் நல்லவறே”.இதுவே “நான்” படத்தின் கதையாகும்.ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகங்கள் உண்டு.ஒன்று சமூகத்திற்கு காட்டும் முகம்,இரண்டு குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் காட்டும் முகம் ,மூன்று மற்றவர்கள் யாருக்கும் தெரியாத ( தெரியபடுத்த விரும்பாத ) இரகசிய முகம்.கார்த்திக் என்பவரின் இரகசிய முகம் தான் “நான்”
நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக மாறுவதும் பெரும்பாலான நேரங்களில் அவன் வாழும் சூழ்நிலைகள் தான் நிர்ணயிக்கிறது.ஒருவன் நல்ல மனிதனாக வாழ்வதற்க்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவனை சார்ந்த மனிதர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவ்வாறு அமையாத ஒருவனின் வாழ்கையே நான் திரைப்படத்தின் களமாகும்.இந்த திரைப்படத்தை முதல் முறையாக “விஜய் அண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்” சார்பில் பாத்திமா விஜய் அண்டனி தயாரிக்கிறார்.கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர், திரு. ஜீவா சங்கர்.இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான திரு. ஜீவா அவர்களின் உதவியாளர்.இந்த படத்தின் முக்கிய அம்சமாக இசையமைப்பாளர் விஜய் அண்டனி இசையமைத்து கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.”நான்” விஜய் ஆண்டனி இசையமைக்கும் 25வது படமாகும்.

“திரில்லர்”வகையை சார்ந்த இந்த படத்தில் ரூபா மஞ்சரி, ஆனந்த் தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த்,அனுயா,கிருஷ்ண மூர்த்தி, ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இவர்களூடன் விஜய் விக்டெர் மற்றும் விபா என்ற புது முகங்கள் அறிமுகமாகிறார்கள்.
நடிப்பதற்க்கு முக்கியத்துவம் வாய்ந்த “”நான்” படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பும் பாடல்களூம்,பின்னனி இசையும் பெரிதும் பேசப்படும் முக்கியமாக இடைவேளை காட்சியிலும் இரண்டாம் பாகத்திலும் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும்.அதே போல் அவரின் அக்மார்க் முத்திரையில் 5 பாடல்களை கொடுத்திருக்கிறார். முக்கியமாக பின்னனி இசை விஜய் ஆண்டனியின் இசை பயணத்தில்”நான்” தனி முத்திரை பதித்துள்ளது.
“”நான்” திரைப்படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக மட்டுமின்றி ஒருவர் பார்வையிலே செல்வது போல் அமைந்திருப்பது தனி சிறப்பாகும்

மிகுந்த பொருட் செலவில் உருவகியிருக்கும் இந்தத் திரை படத்தில் சூர்யா படத்தெகுப்பையும்,விதேஷ் கலையயும், நலன் சேகர் மற்றும் ஜீவா சங்கர் வசனத்தையும்,சோபி நடனத்தையும், ராஜ சேகர் சண்டை காட்சியையும் அமைத்துள்ளனர் திரு.முரளி ராமன் ,சுந்தர காமராஜ் மற்றும் அருண் குமார் தயாரிப்பு மேற்பார்வையில் உருவாகி இருக்கிறது. மக்கள் தொடர்பாக செல்வரகு பணியாற்றியிருக்கும் நான் திரை படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது

NAAN SONG LIST
Song Lyric Writer Singer
Makaiyalla Priyan Mark,Sakthisree,Rapkrishan,Maheshan
Ulaganil miga Uyaram Annamalai Vijay Antony
Thapellam thape illai Asmin Adhi,Santhosh
Dinam Dinam Annamalai Deepak

PRO:SELVARAGHU

kumar srinivas
photo/video journalist

Advertisements