‌எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘என் பெயர் குமாரசாமி’
இயக்‌குனரை‌ பா‌ரா‌ட்‌டி‌ய ‌‌கலை‌ப்‌பு‌லி‌ எஸ்‌.தா‌ணு

வெளிவரவிருக்கும் தமிழ்ப் படங்களில் கோடம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘என் பெயர் குமாரசாமி’. பத்திரிகையாளரான ரதன் சந்திரசேகர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் பல புதுமைகளை தனக்குள் வைத்திருப்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அண்மையில் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கலைப்புலி தாணுவும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநரை மனம் திறந்து பாராட்டியுள்ளனர். “பாலாவுக்கு ஒரு சேதுவைப் போல உங்களுக்கு என் பெயர் குமாரசாமி திருப்புமுனை படமாக அமையும்” என்று இயக்குநரின் தோளில் தட்டிப் பாராட்டியிருக்கிறார் தாணு. “கிளைமாக்ஸ் காட்சியில் தமிழ்நாட்டையே கலங்க வைத்து விடுவீர்கள்” என்று இயக்குனரிடம் உள்ளம் நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

இது குறித்துக் கேட்டபோது, ” நிச்சயம் பேசப்படுகிற படமாகவும், பெரும் வெற்றிப் படமாகவும் “என் பெயர் குமாரசாமி’ அமையும் என்பதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது” என்று கூறும் இயக்குனர் ரதன் சந்திரசேகர், தான் பெறப் போகும் வெற்றியில் எடிட்டர் வி.டி.விஜயனுக்கும், இசையமைப்பாளர் வீ.தஷிக்கும் பெரிய பங்கு இருக்கும் என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.

இந்‌தப்‌ படத்‌தில்‌ பு‌துமுகம்‌ ரா‌ம்‌, மே‌ற்‌கு வங்‌க நடி‌கை‌ தே‌ஸ்‌தா‌ இரா‌வதி‌, யு‌வா‌, மோ‌னி‌கா‌ பி‌லி‌ப்‌ ஆகி‌ய இரண்‌டு ஜோ‌டி‌யு‌டன்‌ பா‌னுப்‌பி‌ரி‌யா‌, ரா‌தா‌ரவி‌, பப்‌லு பி‌ருத்‌வி‌ரா‌ஜ்‌, யோ‌கி‌ தே‌வரா‌ஜ்‌, நா‌ரா‌யணன்‌ தீ‌பக்‌ ஆகி‌யோரும்‌‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. மலை‌யா‌ளத்‌தி‌ல்‌ கா‌மெ‌டி‌யி‌ல்‌ கலக்‌கும்‌ பை‌ஷூ, இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ தமி‌ழுக்‌கு அறி‌முகமா‌கி உள்‌ளா‌‌ர்‌.

மே‌லும்‌ வி‌பரங்‌களுக்‌கு
ஜி‌.பா‌லன்‌
செ‌ய்‌தி‌ தொ‌டர்‌பா‌ளர்‌
kumar srinivas
photo/video journalist