SKYPAUL

சாகசங்கள் நிறைந்த ‘ஸ்கைஃபால்’ ஹாலிவுட் அதிரடி ஜேம்ஸ் பாண்ட் படம்

பெயர் சொன்னால் போதும் புகழ் எளிதில் விலங்கும். அப்படி ஒரு பிரபலமான பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட் ஹாலிவுட் ரசிகர்களை 50 ஆண்டுகளாகக் கட்டி வைத்துள்ள பெயர் இது.

இதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. இப்போது 23வது படமாக ‘ஸ்கைஃபால்’ வெளிவரவுள்ளது.

‘ஸ்கைஃபால்’ (SYK FALL ) வெளிவரும் இந்நேரத்தில் ஜேம்ஸ்பாண்ட் பற்றிய சிந்தனையில் மூழ்கலாம்.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் சில தகவல்கள் வியப்பூட்டும்.

ஜேம்ஸ்பாண்ட் ரகப் படங்கள் எல்லாமே ஏற்கனவே வெளியான கதைகளின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன.

யார் இந்த ஜேம்ஸ்பாண்ட் ?

அயன் ஃப்ளமிங் (Ian fleming) என்றொரு பத்திரிக்கையாளர் எழுத்தாளர். அவர்தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரதின் சிற்பி.

ஒருநாள் எழுத்தார்வம் மிகுதியாக வரவே காலையில் எழுத ஆரம்பித்தார். டைப் செய்து பார்த்த போது 2000 வார்த்தைகள் உருவாகியிருந்தது. விடாமல் எழுதினார். ஒருமாதம் முடிந்திருக்கும் ஒரு முழு நாவல் உருவாகியிருந்தது. அது முடிந்த நாள் 18.03.1952

தன் அனுபவமும் பிறரது அனுபவங்களும் கலந்து கொடுத்திருந்தார். ப்ளமிங் ஒருகாலத்தில் கப்பற்படையில் ஓர் உயரதிகாருக்கு உதவியாளராக இருந்தவர்.

ஜேம்ஸ்பாண்டை மையமாக வைத்து 12 நாவல்களையும், 9 சிறுகதைகளையும் எழுதினார். எல்லாமே பெரிய வெற்றி.

ஜேம்ஸ்பாண்டின் குணம்,கம்பீரம்,செயல்பாடுகளில் பெரும்பாலும் தன்னையே கலந்து படைத்திருப்பார்.

கதையி வரும் ஜேம்ஸ்பாண்ட் தினமும் 60 சிகரெட்டுகள் பிடிப்பவர். ஒரு ஆரோக்கிய பண்ணைக்கு சென்று வந்தபின் மனம் மாறி 25 சிகரெட் குடிப்பவராக மாறினார். அதெல்லாம் பிளமிங்கின் தாக்கம்தான். பிளமிங் 80 சிகரெட் பிடித்ததுண்டு.இப்படி பிளமிங், தான் உருவாக்கும் கதாபாத்திரத்துக்கு ரத்தமும் சதையுமாக, தான் சந்தித்த கேள்விப்பட்ட அனுபவங்கள் வைத்து, தன் குணாதிசயம், இவரால் அறியப்பட்ட பிறரின் குணச்சித்திரம் எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்தார்.

பெயர் வைத்த கதை தெரியுமா?

வலிமையாக, சாதாரணமாக, வெளிப்படையாக ஒலிக்க சரியான ஆசையுடன் கூடிய நல்லபெயரை யோசித்த போது… பறவையியல் நிபுணரும் உலகறிந்த ஒரு சுற்றுச் சூழலியலாருமான கரீபீயன் ஜேம்ஸ்பாண்ட் நினைவுக்கு வரவே வைத்துவிட்டார். அதுதான் இன்று நாம் பாராட்டும் ஜேம்ஸ்பாண்ட் இந்த 007ல் ஏராளமான செய்திகள் உள்ளன. இது உலகப் போரில் ராஜதந்திரமாக பரமரகசியமாக பயன்படுத்திய உளவுத்துறையின் ரகசிய எண். அதையே ஜேம்ஸ் 1952ல் பாண்டுக்கு வைத்து விட்டார். அப்படி இப்பாத்திரம் பிறந்தது.

உண்மையான ஜேம்ஸ்பாண்டான அந்த பறவை இயலாளர் பார்ப்பதற்கு படத்தில் வருகிற ஜேம்ஸ் பாண்ட் நடிகரை போலவே மிடுக்குடன் இருப்பார். என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிச் சொல்வதை விட அவரைப் போலவே ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் நடிகர்களும் மிடுக்குடன் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறலாம்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் இந்த அளவுக்கு புகழ்பெறும் என்று யாருமே எதிர்பாத்திருக்க மாட்டார்கள். ஹாரிபாட்டர் குழந்தைகள் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறக்கும் பாத்திரம். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசித்துக் கொண்டாடப்படும் ஒன்றாகும்.

முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் 1952ம்ல் வெளியானது பெயர் ‘டாக்டர் நோ’ (Dr.No) அதில் நாயகனாக நடித்தவர் சீன் கேனரி இவர் குணச்சித்திர நடிகராக இருந்தவர். பல விருதுகளைப் பெற்றவர். என்றாலும் பக்கவாத்தியன் போல்தான் உணரப்பட்டவர்.ஆனால் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் ஏற்றதும் பக்கா வாத்தியமாக உயர்ந்துவிட்டார் துணை நடிகர் முதல் நடிகராகி விட்டார். இவரது தோற்றம் நடை உடை பாவனைகள் பிடித்துப் போனதால் தொடர்ந்து ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தார்.

சீன் கேனரி பற்றி ஒரு செய்தி ஜேம்ஸ்பாண்டானதும் அவரது இமேஜ் விண்ணில் ஏறி பறந்து கொண்டிருந்தது. ரசிகர்கள் – ரசிகைகள் அவர் மீது பைத்தியமாக கிடந்தார்கள். எந்த அளவுக்கு தெரியுமா? அவரது பாதிப்பும் தாக்கமும் அவர் ஜேம்ஸ்பாண்ட் நடிப்பை விட்ட பிறகும் தொடர்ந்தது, ‘பீப்பிள்’ இதழ் 1999ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது அதில் இந்த நூற்றாண்டில் செக்ஸியான ஆண் சீன் கேனரி என்று ரசிகர்கள் சீன் கேனரியைக் கூறியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். அப்போது அவரது வயது 69 என்பது அதிர வைக்கும் நிஜம்.

ஜேம்ஸ்பாண்டாக அடுத்தடுத்த சிலர் நடித்தவனர். சீன் கேனரி அளவுக்கு யாரும் கொண்டாடப்பட்டதில்லை என்பதே வரலாறு, இவருக்குப்பின் நடித்த ரோஜர் முர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இப்போது 5வது நடிகராக டேனியல் க்ரெய்க் நடித்துள்ளார். இவரை ஏற்றுக் கொள்வதில் பெரிதும் தயக்கம் இருந்தது. முந்தைய நடிகர்களுடன் ஒப்பிடப்பட்டு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படத்தில் இவரது தோற்றம் நடிப்பு ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விமர்சனங்கள் நொறுங்கி போயின. லண்டன் ஒலிம்பிக் 2012 தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியுடன் அரங்கில் வலம் வருமளவுக்கு உயர்ந்தார்.

இப்போதைய ‘ஸ்கைஃபால்’ படத்தின் நாயகன் டேனியல் க்ரெய்க்தான். சீக்ரெட் ஏஜெண்டான இவரது நேர்மையான நற்பெயருக்கு நம்பகத் தன்மைக்கும் சோதனை வருகிறது. தன் புத்திசாலித்தனத்தாலும் சாகசங்களாலும் எப்படி எதிரிகளை சதிவலைகளை உடைத்து நிமிர்ந்து நிற்கிறார் என்பதுதான் கதை.

ஜேம்ஸ்பாண்ட் கதை சூத்திரம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். கதையின் பின்புலம், காட்சிகளின் பிரமாண்டம்,சாகசங்களாக மிரட்டும் சண்டைக் காட்சிகள்தான் படத்துக்குப் படம் மாறுபடும், வேறுபடும்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாயகன் அளவுக்கு வில்லனும் பேசப்படும்படி பாத்திரம் சக்திமிக்கதாக இருக்கும். ‘ஸ்கைஃபாலில்’ வில்லனாக நடித்துள்ளவர் ஜேவியர் பேர்டம். சிறுவயது முதலே நடிப்பு அனுபவம் கொண்டவர். படத்துக்காக தன் தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டுள்ளார்.

பாண்ட் கேர்ளாக வலம் வருபவர் நயோமி,பெர்னிஸ் மர்லோஹி இருவருமே பெரிய நட்சத்திரங்கள். இருவருமே பல சாதனைகள் படைத்த நடிகைகள்.

மேலும் ஹெலன் மெக்ரோரி.ஜீடி டென்ச் நடித்துள்ளனர்.

இயக்கியவர் சாம் மெண்டஸ். இவர் இயக்கியுள்ள எழாவது படம் தான் ‘ஸ்கைஃபால்’ இவர் அகாடாமி விருது உள்பட பல விருதுகள் பெற்ற படைப்பாளி. ஜேம்ஸ்பாண்டின் முதல் பதினாறு படங்கள் ஐந்து இயக்குநர்களால் இயக்கப்பட்டன. பிறகு வந்தவர்கள் ஒன்றிரண்டு படங்களே இயக்கினர். இந்த வரிசையில் சேர்வதென்றால் சாதாரணமல்ல இவர் சேர்ந்திருப்பது இவரது திறமைக்குச் சான்று. ஒளிப்பதிவு ரோஜர் டீக்கின்ஸ் இப்படத்துக்காக ஹ்சசன ஹடநஒய கேம்ர பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் எடுப்பது என்பது யானையைக் கட்டி தீனிபோடுவது போன்றது. செலவு பிடிக்கும் திட்டம் அதனால் இப்படத்தை தயாரிக்கும் முன்பு பலருக்கும் தயக்கம் இருந்தது. இறுதியில் கொலம்பியா பிக்சர்ஸ்,சோனி பிக்சர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பது என்று முடிவானது.

ஜேம்ஸ்பாண்ட் பட அறிவிப்பு துவங்கும் முன்பே செய்திகள் அணி வகுக்க ஆரம்பித்தன பல யூகங்களும் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று அதிரடி ஆக்ஷன் படங்கள் விருதுகளைக் கவர்வதில்லை. என்வே இப்படதின் இயக்குநர் வழக்கமான ஆக்ஷன் அதிரடிகளைக் குறைத்து மனதைத் தொடும் வகையில் வேறுவிதமாக எடுக்கப் போகிறார். அதன் மூலம் விருதைக் குறி வைக்கிறார். என்பது இப்படிப் பல செய்திகளைப் பார்த்த இயக்குநர் பதறிப் போய் மறுத்தார்.

ஜேம்ஸ்பாண்டின் வசீகரம் அளவிட முடியாத அளவுக்குப் பறந்து பட்டது.விசாலமானது.அந்த நற்பெயருக்குக் களங்கம் வருமளவுக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. ‘ஸ்கைஃபால்’ பாண்ட் ரசிகர்களை எந்த விதத்திலும் ஏமாற்றாத புதிய அனுபவமாக இருக்கும் ஜேம்ஸ்பாண்டின் சாகசங்கள் தொடரும் படம்தான் இதுவும்’ என்று பதில் கூறினார்.

2011 படம் தொடங்கப்பட்டது முதல் ஊடகங்களுக்கான சந்திப்பு நவம்பர் 3ல் லண்டன் கொரிந்தியா ஓட்டலில் நடத்தப்பட்டது. அதன் பிறகு செய்தி மழைதான். படம் தாமதமான காலத்தில் கூட திரைக்கதை ஆசிரியர்களுடன் பாத்திரத்தை செழுமைப்படுத்தும் வேலைகளையே இயக்குநர் செய்து வந்தார்.

‘ஸ்கைஃபால்’ படத்துக்கு யதேச்சையாக பல பெருமைகள் வந்து சேர்ந்து கொண்டன. முதல் பாண்ட் படம் ‘டாக்டர் நோ’ வந்த 1962ஐ கணக்கிட்டால் 50 ஆண்டுகள் ஆகி ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டாகி விட்டது 2012. இது தொடர்பான கொண்ட்டாட்ட நிகழ்ச்சிகள் ஐரோப்பிய யூனியன் முழுக்க கொடி கட்டிப் பறக்கின்றன. தீம் மியூசிக்கள் திசையெட்டும் ஒலிக்கின்றன.

இந்த விளம்பரங்கள் கூடுதல் பலமாகி விட்டது. ஐநாக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடப்படும் முதல் பாண்ட் படமும் இதுதான்.

நவம்பர் 7,2011ல் படப்பிடிப்பு தொடங்கியது. லண்டன் ஆரம்பித்து கிரீன் வீச் ஓல்டு ராயல் நேவல் கல்லூரி, பாலங்கள் மருத்துவமனை, ஸ்டேடியம், தேசிய கேலரி என்று எடுக்கப்பட்டன. துருக்கியின் இஸ்தான்புல்லிப் பல இடங்களில் எடுக்கப்பட்டன. அங்கு மட்டும் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது படக்குழு. சீனாவில் ஷாங்காய் நகரில் ஏர்போர்ட் போன்ற பல இடங்கள்,ஜப்பானில் நாகசாகி கடற்கரை பகுதி, ஹாஷிமா தீவு, மனிதர் வசிக்காத சில பகுதிகளிலும் செட் போட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

மொத்தம் 133 நாட்கள் படக்குழு காட்சிகளை பதி செய்துள்ள. துருக்கியில் ஏராளமான இளைகர்களுக்குப் பயிற்சியளித்து ஒத்திகை பார்த்து காட்சிகளில் இடம்பெற செய்துள்ளார்கள். துருக்கியில் கேமரா காணாத பல பகுதிகளை சிறைப்பிடித்து வந்துள்ளார். அங்கு ஸ்பைஸ் பஜார்,க்ராண்ட் பஜார் போன்ற வணிகவளாகங்கள் மூடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதற்கான வியாபார இழப்பை தினமும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக நடத்தப்பட்டது. அதற்கான வியாபார இழப்பை தினமும் குறிபிட்ட தொகையை இழப்பீடாக வழங்கி படப்பிடிப்பு நடந்துள்ளது.

எங்கேல்லாம் சேதங்கள் செய்யப்பட்டதே அவை புதிதாக அமைத்து தரப்பட்டது.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படமான ‘ஸ்கைஃபால்’ உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் நவம்பர் 1ல் வெளியாகிறது.

உலக ரசிகர்களின் 150 மில்லியன் டாலர் கனவு விரைவில் உங்கள் திரையரங்குகளில் காட்சியாக விரிய இருக்கிறது.தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.இந்தியாவில் மட்டும் 1300 திரை அரங்குகளில் வெளி வருகிறது .
PRO: SIVAKUMAR

Advertisements