அன்பான தமிழ் மக்களே!

கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாககடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளைஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு
தமிழர் கனடிய பேரவை
(416) 240-0078

———————————————————————————————————————————————————————————————————————————-
October 30, 2012

Message from Canadian Tamil Congress

The Canadian Tamil Congress is an organization that voices its opinion on issues that concern Tamils in Canada and around the world. Recently, we have received numerous inquiries about an issue that has come up in the Tamil community. What follows is our opinion on this subject and shall not be construed as an endorsement of any kind.
November 27th and the week that the date falls has been considered “Maveerar Naal” and “Maveerar week” by Tamils all around the world for the past many years. It’s an important time for most Tamils to remember and respect the lives perished in the civil war. However, it is our understanding, that most recently, here has been an attempt by certain individuals or organizations to mark the entire calendar month of November as “Maveerar month” – thereby unilaterally declaring it as a month where activities that involve entertainment and leisure is frowned upon. This is something new that has come up only now with no historical reference or relevance.
While the Canadian Tamil Congress respects different opinions and views of individuals or organizations, CTC remains concerned that these views should not be forced upon the community nor should these views be used to intimidate others into following certain beliefs. Members of our community should be allowed to make their own decision and live life as they please as in any other free society. They should not be branded as traitors for any difference of opinion.
We urge all Tamils and Tamil organizations to direct all their energy and resources on issues that matters most to Tamils in Sri Lanka and around the world. We have many issues coming up like the Universal Periodic Review in Geneva on November 1, 2012, UN Human Rights Council session in March 2013 and the Commonwealth Heads of States meeting in Sri Lanka in late 2013. We need all Tamils and interested organizations help, to continue to spotlight what went on in Sri Lanka and bring justice to Tamils in Sri Lanka and around the world. Canadian Tamil Congress will be there all the way and speak for Tamils at every opportunity.

For further information please contact the Canadian Tamil Congress at 416-240-0078.
NEWS: By Tamilcinema.com

Advertisements